ADDED : ஜூலை 06, 2026 10:33 PM
மதுரை: ஆஸ்திரேலியன் கஸ்பா பட்டாணி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தின் பருப்பு, பயறு வகைகள் தேவைக்கு வடமாநிலம், வெளிநாடுகளை நம்பியுள்ளோம். உளுந்து, துவரை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பட்டாணியின் உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப அவ்வப்போது மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி அளிக்கிறது. ஐந்தாண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கஸ்பா பட்டாணிக்கு மட்டும் இறக்குமதி அனுமதி வழங்கவில்லை. தமிழகம், கேரளாவில் பட்டாணியை மாவாக்கி அரைக்கும் மில்கள் நிறைய உள்ளன. இறக்குமதி அனுமதி கிடைக்காததால் மில்கள் செயல்படவில்லை. எனவே கஸ்பா பட்டாணியை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததால் தொழிற்சாலைகள் செயல்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றனர்.
