
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு அருகே 66.மேட்டுப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.3ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின.
நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. ராமசுப்பிரமணியன் அய்யர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.