ADDED : மே 20, 2024 06:40 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் தாமோதரன்பட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 17 முதற்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
அம்மன், சக்தி விநாயகர், அழகு மலையான், சின்னக் கருப்பு, முருகன், மூலக்கரை கன்னிமார் சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* அலங்காநல்லுார் அருகே மேலச்சின்னணம்பட்டியில் முத்துக் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர்.
சுவாமி, மாலையம்மன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முத்து கருப்பணசாமி கோயில் பங்காளிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

