ADDED : ஜூன் 13, 2024 06:38 AM

விக்கிரமங்கலம்: சக்கரப்பநாயக்கனுார் அருகே மோலையூர் அய்யம்பட்டியில் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இங்கு ஜூன் 11 ல் முதற் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
பாலமேடு
மறவபட்டியில் சுடலைமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள், பெண்ணடி மக்கள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லுார்
குறவன்குளம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து ஸ்ரீதர் ஐயர் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
* குட்டிமேய்க்கிபட்டியில் வெள்ளையம்மாள், நொண்டிசாமி, கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். அம்மன், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.