/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எமிஸ் பயிற்சியா, துாய்மைப்பணியா? ஆய்வக உதவியாளர்கள் குழப்பம்
/
எமிஸ் பயிற்சியா, துாய்மைப்பணியா? ஆய்வக உதவியாளர்கள் குழப்பம்
எமிஸ் பயிற்சியா, துாய்மைப்பணியா? ஆய்வக உதவியாளர்கள் குழப்பம்
எமிஸ் பயிற்சியா, துாய்மைப்பணியா? ஆய்வக உதவியாளர்கள் குழப்பம்
ADDED : ஜூலை 08, 2024 12:25 AM
மதுரை : மதுரையில் ஒரே நாளில் எமிஸ் பயிற்சியும், ஆய்வகங்களை துாய்மைப் படுத்தம் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஆய்வக உதவியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இன்று முதல் மூன்று (ஜூலை 8, 9, 10) நாட்களில் அனைத்து அறிவியல், ைஹடெக், ஆங்கில ஆய்வகங்களிலும் 'மாஸ் கிளீனிங்' பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இன்றும், நாளையும் எமிஸ் பதிவேற்றம் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் சி.இ.ஓ., அலுவலகத்தில் நடப்பதால் அதில் ஆய்வக உதவியாளர்கள் பங்கேற்க வேண்டும் என சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வக உதவியாளர்கள் கூறுகையில் ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகளிலும் எவ்வாறு பங்கேற்க முடியும். இயக்குநர் உத்தரவை பின்பற்றுவதா, சி.இ.ஓ., உத்தரவை பின்பற்றுவதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர்.