ADDED : செப் 05, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர், : திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது.
காலையில் மூலவர் முன்பு உற்ஸவர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளினார். பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. மாலை 6:15 முதல் இரவு 8:00 மணிவரை லட்சார்ச்சனை நடந்தது. இந்த லட்சார்ச்சனை நாளைவரை நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 7 காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்ஸவர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.