
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டியில் மருதுபாண்டியர் மற்றும் அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்ஸவம் மார்ச் 19ல் துவங்கியது.
நேற்று முன்தினம் சுமங்கலி பூஜையை தொடர்ந்து, உலக மக்கள் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டி விளக்கு பூஜை நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் நேற்று மாவிளக்கு, பால்குடம், அங்கபிரதட்சணம் செய்தனர்.
இன்று (ஏப்.,3) பொங்கல் வைத்து, அக்னிசட்டி எடுத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

