ADDED : மார் 26, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை புதுார் ரேவதி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் குறிப்பிட்ட பட்டா நிலத்தில் கிராவல் மண் அள்ள ஒருவருக்கு அரசு குவாரி உரிமம் வழங்கியது. விதிகளை மீறி அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளப்படுகிறது. உரிமத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், கனிமவள துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

