/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல்லாங்குழி ரோடுகள் பளபளக்க 'பேட்ச் ஒர்க்' நடமாடும் வாகனம் துவக்கிவைப்பு

ADDED : மார் 13, 2025 05:12 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக கிடக்கும் ரோடுகளை தற்காலிகமாக சரிசெய்வதற்கு நடமாடும் 'பேட்ச் ஒர்க்' வாகனத்தை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
மாநகராட்சியில் பல இடங்களில் ரோடுகள் மோசமாக உள்ளன. வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி பயணிக்கின்றனர். வாகன போக்குவரத்து சவாலாக உள்ளது. ஆனால் பெரியாறு கூட்டுக்குடி நீர்த் திட்டக் குழாய்கள் பதிப்பு பணி முடிந்தவுடன் தான் ரோடுகள் சீரமைக்க முடியும் என மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே மேடு பள்ளமான ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்து முதற்கட்டமாக மண்டலம் 3 பகுதி வார்டுகளின் ரோடுகளில் பணிகளை துவக்கியுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். இம்மண்டலத்தில் மட்டும் 19 வார்டுகளில் 260 கிலோ மீட்டருக்கும் மேல் ரோடுகளில் பேட்ச் ஒர்க் நடக்கவுள்ளது.
மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, உதவி கமிஷனர் பிரபாகரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து. கவுன்சிலர் ராஜ்பிரதாபன் பங்கேற்றனர்.