/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி
/
வழக்கறிஞர் நல முத்திரை கட்டண வழக்கு தள்ளுபடி
ADDED : மார் 11, 2025 08:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வழக்கறிஞர் ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக வழக்கறிஞர்கள் நல முத்திரைக் (ஸ்டாம்ப்) கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தி சட்டத்துறை செயலர் அரசாணை வெளியிட்டார். அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ரத்து செய்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு:வழக்கறிஞர்கள் நல நிதி அவர்களின் நலனிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இம்மனுவை விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.