ADDED : ஜூலை 28, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மைய துறை தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். உதவி பேராசிரியர் முனியசாமி அறிமுக உரையாற்றினர். காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் நாகநாதன் ‘காலத்தால் அழியாத தமிழ்’ என்ற தலைப்பில் பேசினார். மாணவி சுபிக்ஷா தேவி தொகுத்துரைத்தார். மாணவி கனிமொழி நன்றி கூறினார். உதவி பேராசிரியர்கள் தேவிபூமா, மல்லிகா, திருஞானசம்பந்தம், ஆய்வாளர்கள் மோனிகாயாழினி, சுரேஷ், சவுமியா ஒருங்கிணைத்தனர்.
