ADDED : ஜூன் 01, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வாகனம் மூலம் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள் ஜமுனா, நாகராஜன், அனுராதா துவக்கி வைத்தனர். நீதிமன்ற நடைமுறைகள், வழக்கு தாக்கல் செய்தல், சட்ட உதவி மையத்தின் சேவைகள் குறித்து கரும்பாலை, அழகர்கோவில் பகுதியில் பிரசாரம் நடந்தது. இன்று (ஜூன் 1) உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூரில் பிரசாரம் நடக்கிறது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் (கூடுதல் பொறுப்பு) ராமலிங்கம் ஏற்பாடுகள் செய்துள்ளார்.