/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊர் கூடி தேர் இழுப்போம் வாங்க... பாரம்பரிய முறைப்படி அழைப்பு
/
ஊர் கூடி தேர் இழுப்போம் வாங்க... பாரம்பரிய முறைப்படி அழைப்பு
ஊர் கூடி தேர் இழுப்போம் வாங்க... பாரம்பரிய முறைப்படி அழைப்பு
ஊர் கூடி தேர் இழுப்போம் வாங்க... பாரம்பரிய முறைப்படி அழைப்பு
ADDED : மார் 13, 2025 05:11 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் மார்ச் 19ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 18ல் நடக்கிறது. மறுநாள் பெரிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருள திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள், மக்கள் வடம் பிடிக்க மலையைச் சுற்றி தேர் வலம் வரும். இதற்காக முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது. வசந்த் ஸ்தானிகர், சுகி, வைராவி செல்வம், காவல் தலையாரி மகாராஜன், கர்ணம் வீரபத்திரன், மிராசு காவல்காரர்கள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, பத்திரிக்கை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைத்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடக்கிறது.