/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மது விற்றவர் டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
மது விற்றவர் டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மது விற்றவர் டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மது விற்றவர் டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூலை 20, 2024 01:12 AM

மதுரை: சட்டவிரோதமாக மது விற்றவர் தேனி பழனிசெட்டிபட்டியில் விதிகளை மீறி டாஸ்மாக் கடை செயல்படுவதாகவும், மூட உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ஆஜிக் அரபுகனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. சட்டவிரோதமாக 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலைக்கு விற்கின்றனர். பில் வழங்குவதில்லை. இதற்கு சில போலீசாரும் உடந்தை.
மது அருந்துவோர் நகை பறிப்பில் ஈடுகின்றனர். போக்குவரத்து பாதிப்பு உட்பட பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் செய்தேன். கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு: சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடர்பாக மனுதாரருக்கு எதிராக சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே அபராதம் செலுத்தியுள்ளார். வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை.
அவர் துாய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தை நாடவில்லை. சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறவில்லை என அரசு தரப்பு கூறுகிறது.
அவ்வாறு நடக்கும்பட்சத்தில் போலீசில் டாஸ்மாக் நிர்வாகம் புகார் செய்யலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.