/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெறித்த காளைகள் 685 தெறித்த காளையர் 350 அலங்காநல்லுாரில் அதகளம்
/
வெறித்த காளைகள் 685 தெறித்த காளையர் 350 அலங்காநல்லுாரில் அதகளம்
வெறித்த காளைகள் 685 தெறித்த காளையர் 350 அலங்காநல்லுாரில் அதகளம்
வெறித்த காளைகள் 685 தெறித்த காளையர் 350 அலங்காநல்லுாரில் அதகளம்
ADDED : பிப் 24, 2025 04:12 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பழனியாண்டி, ஆர்.டி.ஓ., ஷாலினி, மீட்பு குழு மாநில தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 685 காளைகள், 350 வீரர்கள் களம் கண்டனர்.
வெற்றிபெற்ற காளை, வீரர்களுக்கு எல்.இ.டி., டிவி, சைக்கிள், மிக்ஸி, டைனிங் டேபிள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் காயமடைந்த 26 பேரில் ஐவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த அரங்கில் மார்ச 9ல் மதுரை மேற்கு தொகுதி காளைகளுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.---