ADDED : ஜூலை 01, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கண்ணனேந்தலை சேர்ந்த சிறுவன் திசான், வயது 11, தமிழ்நாட்டிற்கு விளையாட்டுத் துறையில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் ஆர்மி ஸ்போர்ட்ஸ் பாய்ஸ் விடுதியில் சேர்ந்து படிக்க தேர்வாகி உள்ளார்.
அகில இந்திய அளவில் பி.இ.ஜி., குருப் (பாம்பே இன்ஜினியரிங் குருப்) கட்கி, புனேவில் நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், நொய்டா, சட்டீஸ்கர், சண்டிகர், டெல்லி, மும்பை, கோல்கட்டா, ஜார்கண்ட், ராஜஸ்தான், பகுதிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களில் 10 மாணவர்கள் ஜிம்னாஸ்டிகில் தேர்வாகினர். இவர்களில் திசான் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.