/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : ஆக 30, 2024 10:59 PM

மதுரை : மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதுார் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மத்திய சிறை பிரிட்டீஷ் ஆட்சியில் 1865ல் அமைக்கப்பட்டது. அங்கு 1252 கைதிகளைத்தான் தங்க வைக்க முடியும். தற்போது 2379 கைதிகள் உள்ளனர். இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலுார் அருகே இடையபட்டியில் சிறையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கடம்ப மரங்கள் அதிகம் உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வாடிப்பட்டி அருகே தெத்துார் மற்றும் கரடிக்கல் இடையே மத்திய சிறை அமைக்க மாவட்ட நிர்வாகம் இடத்தை அடையாளம் கண்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மாற்று இடம் தேர்வு செய்து புதிய மத்திய சிறை வளாகம் அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு தமிழக உள்துறை முதன்மைச் செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,9 க்கு ஒத்திவைத்தது.