/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வு
/
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வு
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வு
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வு
ADDED : பிப் 28, 2025 06:13 AM
மதுரை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தமதுரை மாநகராட்சியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது என கமிஷனர் சித்ரா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாநகராட்சி வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம், கழிவு நீர் பராமரிப்பு, முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணி செயல்படுத்தப்படுகிறது. 100 வார்டுகளிலும் தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.1609.69 கோடியில் நடக்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தில் கூடுதலாக 135 எம்.எல்.டி.,குடிநீர் கிடைக்கும். இதற்காக தற்போது 100 வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைவுபடுத்தப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 63 ஆயிரத்து 958 குடிநீர் இணைப்புகளில் 1 லட்சத்து 5 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. இத்திட்டம் ஏப்ரலில் துவக்கப்படும்.
பழைய 72 வார்டுகளில் உள்ள பாதாளச் சாக்கடை பிரச்னைக்கு தீர்வுகாண மறுசீரமைப்பு பணிக்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரையை 100 சதவீதம் துாய்மை நகராக மாற்றநடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.135 கோடியில் தினமும் 610 மெட்ரிக் டன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மதுரை மாநகராட்சியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது என்றார். பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன் உடனிருந்தார்.