/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை; வாடிப்பட்டியில் 86 மி.மீ.,
/
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை; வாடிப்பட்டியில் 86 மி.மீ.,
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை; வாடிப்பட்டியில் 86 மி.மீ.,
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை; வாடிப்பட்டியில் 86 மி.மீ.,
ADDED : மே 17, 2024 05:23 AM

மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வாடிப்பட்டியில் 86 மி.மீ., அளவு பதிவானது.
கோடை வெயில் கொளுத்திய நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஓரளவு வெப்பம் தணிந்துள்ளது. நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை (697.40 மி.மீ.,) பெய்தது. மழையளவு (மி.மீ.,):
மதுரை வடக்கு 30.20, தல்லாகுளம் 26.80, பெரியபட்டி 45.60, விரகனுார் 15, சிட்டம்பட்டி 28.60, கள்ளந்திரி 38.40, இடையபட்டி 1, தனியாமங்கலம் 35, மேலுார் 28, புலிப்பட்டி 24, சோழவந்தான் 1.60, சாத்தையாறு அணை 65, மேட்டுப்பட்டி 67.40.
ஆண்டிப்பட்டி 58.20, உசிலம்பட்டி 7, குப்பணம்பட்டி 7, விமான நிலையம் 46.80, திருமங்கலம் 70.40, பேரையூர் 8.40, எழுமலை 0.60, கள்ளிக்குடி 6.40.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.40 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் 1799 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 308 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 50.59 (71). அணையில் 2071 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 9.40 (29 அடி). அணையில் 6.77 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையால் ஆரியபட்டியில் 10 எக்டேர், முதலைக்குளத்தில் 15 எக்டேர் அளவிற்கு நெற்பயிரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

