ADDED : ஆக 06, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் போலீஸ் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவு உள்ளது. இங்கு வெடிகுண்டு, போதைப் பொருட்கள், குற்றங்களை கண்டறிய 8 மோப்ப நாய்கள் உள்ளன. இந்நிலையில் பிறந்து நுாறு நாட்கள் ஆன, லேபர் டாக் ரெட்ரிவர்' இனத்தைச் சேர்ந்த புதிய மோப்பநாய் வாங்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி, இப்புதிய நாய்க்கு 6 மாதங்கள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த மோப்ப நாய்க்கு அழகர்' என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர், ஆய்வாளர், மோப்ப நாய் படைப்பிரிவின் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.