/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழை 'பிடிக்காத' மதுரை ரோடுகள் மரண பள்ளங்களில் தினமும் நடப்பது சாகசம்
/
மழை 'பிடிக்காத' மதுரை ரோடுகள் மரண பள்ளங்களில் தினமும் நடப்பது சாகசம்
மழை 'பிடிக்காத' மதுரை ரோடுகள் மரண பள்ளங்களில் தினமும் நடப்பது சாகசம்
மழை 'பிடிக்காத' மதுரை ரோடுகள் மரண பள்ளங்களில் தினமும் நடப்பது சாகசம்
ADDED : ஆக 12, 2024 04:50 AM

மதுரை, : மதுரை மாநகராட்சியில் அரை மணிநேரம் மழை பெய்தாலும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து படுதிண்டாட்டமாக மாறிவிடுகிறது.
கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் மதுரை மாநகராட்சியில் 80 சதவீத ரோடுகளில் போக்குவரத்து அல்லோகலப்பட்டது.
மழைநேரம் 'அந்த ரோட்டில் போனால் மாட்டிக்கொள்வோம்; இந்தப் பாதையில் போகலாம்' என சாணக்கியத்தனமாய் யோசித்து 'ரூட்'டை மாற்றினாலும் வேறு இடத்தில் சிக்குவது 'மழைக்கால' வாடிக்கையாகிவிட்டது.
மழை பெய்தால் ரோட்டில் செல்வது சிரமம் என புகார் தெரிவித்தாலும் அதிகாரிகளின் நடவடிக்கையோ 'தற்காலிக தீர்வு' என்ற வகையில்தான் உள்ளது.
அந்த வகையில் மழை பெய்தால் தத்தளிக்க விடும் ரோடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வைக்கு பட்டியலிடுகிறோம்:
'டாப் 25' ரோடுகள்
பெரியார் பஸ் ஸ்டாண்ட் கட்டபொம்மன் சிலை பகுதி, நேதாஜி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, மேலவெளி வீதி குட்ெஷட் தெரு, பந்தல்குடி கால்வாய் ரோடு. செல்லுார் ரோடு, ஜம்புரோபுரம், பழங்காநத்தம் ரவுண்டானா, திருப்பரங்குன்றம் ரோடு, வசந்த் நகர், தெற்கு வெளி வீதி (கிரைம் பிராஞ்ச்), கோகலே ரோடு, தளவாய் அக்ரஹாரம், சொக்கநாதர் கோயில், கர்டர் பாலம், கல் பாலம், கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட், கோரிப்பாளையம், கரும்பாலை மெயின் ரோடு, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் - அரவிந்த் கண் மருத்துவமனை செல்லும் ரோடு, பெத்தானியாபுரம் வைகை கரையோர பகுதிகள், தெப்பக்குளம் சிமென்ட் ரோடு, காளவாசல் தேனி ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஒர்க் ஷாப் ரோடு என பட்டியல் நீள்கிறது.

