/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில யோகா, சிலம்பத்தில் வென்ற மதுரை மாணவர்கள்
/
மாநில யோகா, சிலம்பத்தில் வென்ற மதுரை மாணவர்கள்
ADDED : ஆக 03, 2024 06:23 AM
மதுரை : கோவில்பட்டியில் ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப்மென்ட் பவுண்டேஷன் சார்பில் மாநில அளவிலான யோகா மற்றும் சிலம்ப போட்டிகள் நடந்தன. மாநில அளவில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை நரசிங்கம் பகுதி யங் ஸ்டார் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 18 மாணவர்கள் பங்கேற்றனர்.
யோகாவில் 10 வயது பிரிவில் கே.என்.ஜி.மெட்ரிக் பள்ளி மாணவன் சூர்யகுமரன் தங்கம் வென்றார். ஆறு வயது பிரிவில் வல்லபா பள்ளி மாணவி தன்விதா தங்கம், 8 வயது பிரிவில் மகாத்மா பள்ளி மாணவன் அக் ஷய் வெள்ளி, 12 வயது பிரிவில் மகாத்மா பள்ளி மாணவன் அமர்வின் வெண்கலம், பொதுப்பிரிவில் இ.பி.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவி ரித்திகா தங்கம் வென்றனர்.
சிலம்ப போட்டியில் 10 வயது பிரிவில் செவன்த்டே பள்ளி மாணவன் இனேஷ் ஒற்றைக்கம்பு, இரட்டை கொம்பு, மான் கொம்பு, இரட்டை வாள் அனைத்திலும் தங்கம் வென்றார். எட்டு வயது பிரிவில் மகாத்மா பள்ளி மாணவன் அக் ஷய் ஒற்றைக்கம்பு போட்டியில் வெள்ளி, வல்லபா மெட்ரிக் பள்ளி மணவன் மாதவதேவ் ஒற்றை கம்பில் தங்கம், 12 வயது பிரிவில் வல்லபா பள்ளி மாணவன் மாதவகுரு ஒற்றைக்கம்பில் வெள்ளி, இரட்டைக் கம்பு பிரிவில் தங்கம், 14 வயது பிரிவில் இ.பி.ஜி. பள்ளி மாணவன் சந்தோஷ்பாஸ்கர் சுருள்வாளில் தங்கம், 16 வயது பிரிவில் வல்லபா பள்ளி மாணவன் இரட்டை கம்பில் தங்கம், டான்பாஸ்கோ பள்ளி மாணவன் விஷ்வபாரதி ஒற்றை கம்பில் தங்கம், ஆர்.சி.நடுநிலைப் பள்ளி மாணவன் சஷ்டி இரட்டைவாள் போட்டியில் தங்கம் வென்றனர்.
பெண்கள் பிரிவில் 4 வயது பிரிவில் விகாசா பள்ளி மாணவி ஒற்றை கம்பில் தங்கம், 6 வயது பிரிவில் பி.என்.மெட்ரிக் பள்ளி மாணவி ஒற்றை கம்பில் தங்கம், இ.பி.ஜி., பள்ளி மாணவி இரட்டை கம்பில் தங்கம், 12 வயது பிரிவில் இ.பி.ஜி., பள்ளிம மாணவி ரித்திகா ஒற்றை கம்பு, இரட்டை கம்பு போட்டிகளில் தங்கம், 10 வயது பிரிவில் ஆக்ஸிலியம் பள்ளி மாணவி வேணிஸ்ரீ இரட்டை மான்கொம்பு போட்டியில் தங்கம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.