/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இன்று மஹா பெரியவரின் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகம்
/
மதுரையில் இன்று மஹா பெரியவரின் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகம்
மதுரையில் இன்று மஹா பெரியவரின் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகம்
மதுரையில் இன்று மஹா பெரியவரின் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகம்
ADDED : ஆக 18, 2024 05:11 AM
மதுரை : காஞ்சி மஹா பெரியவரின் நுாறாண்டு கால வாழ்க்கையை அவரின் நான்கு பருவங்களில் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகமாக காட்சிகளாக்கியுள்ளது எஸ்.எஸ். இன்டர் நேஷனல் லைவ் நிறுவனம்.மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்று (ஆக., 18) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.
பெரியவரின் பள்ளிப்பருவம் துவங்கி கனகாபிஷேகம் வரை முக்கியமான நிகழ்வுகள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. காஞ்சி மடத்தின் ஆசிகள், அனுமதியோடு 2017 ல் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. தற்போதுவரை இந்தியாவின் பல பகுதிகள், சிங்கப்பூரில் மொத்தம் 40 காட்சிகள் அரங்கேறியுள்ளன. ஹிந்து மதத்தின் மேன்மை, கடவுள் நம்பிக்கையின் அவசியம், எளிமையின் அருமை, அரசியலில் ஆன்மிகம், படிப்பின் கட்டாயம், நாட்டுப்பற்றின் உயர்வு, மதமாற்றம் பற்றிய தெளிவு என பல செய்திகளை பெரியவர் வழி இந்நாடகம் பேசுகிறது. நாடகத்திற்கு இசை மாண்டலின் யு.ராஜேஷ், அரங்கம்தோட்டா தரணி, எழுத்து, இயக்கம் இளங்கோ குமணன். மூன்று மணி நேர நாடகம், காஞ்சி மடத்தில் மஹா பெரியவரோடு பயணித்த உணர்வினை பார்வையாளர்களுக்கு பெற்றுத்தரும்.

