ADDED : மே 08, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பாலியல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணா மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதுடன், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை மகிளா காங்., தொண்டர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.
இவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளித்த மனுவை, மாவட்ட தலைவர் ஷானவாஸ் பேகம் தலைமையில் கலெக்டரிடம் மனுவாக வழங்கினர். அவருடன் பொதுச் செயலாளர்கள் சுஜாதா, சுமதி, உஷா, துணைத் தலைவர் ராபியத்பேகம், காங்., மாவட்ட துணைத் தலைவர் பாலு, நிர்வாகிகள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் சென்றனர்.

