
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கேட்டுக்கடை வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது.
புனித ஸ்தலங்களின் நீர் கலசங்களுக்கு யாகசாலையில் வைத்து பட்டாச்சாரியார்கள் பூஜை செய்தனர். சுவாமி, அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தனம் அம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

