/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலிண்டர் விலை ரூ.500 மாணிக்கம் தாகூர் உறுதி
/
சிலிண்டர் விலை ரூ.500 மாணிக்கம் தாகூர் உறுதி
ADDED : ஏப் 04, 2024 04:56 AM

விருதுநகர் : ராகுல் பிரதமரானால் மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். சிலிண்டர் விலை ரூ. 500 ஆக விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும் என காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் அல்லம்பட்டிபிரசாரத்தில்காங்., வேட்பாளர்மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
ராகுல் பிரதமரானால் மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.ஒருலட்சம் வரவு வைக்கப்படும். சிலிண்டர் விலை ரூ.500 ஆகநிர்ணயிக்கப்படும்.பிரதமர் மோடி தன் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அதானி, அம்பானியைமேம்படுத்துவதற்கான முயற்சிகளை மட்டுமே செய்து உள்ளார்.உலக பணக்கார வரிசையில்2வது இடத்திற்கு அதானி வர முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி, என்றார்.

