/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாதிச்சான்று தராவிடில் மீண்டும் புறக்கணிப்பு போராட்டம்
/
சாதிச்சான்று தராவிடில் மீண்டும் புறக்கணிப்பு போராட்டம்
சாதிச்சான்று தராவிடில் மீண்டும் புறக்கணிப்பு போராட்டம்
சாதிச்சான்று தராவிடில் மீண்டும் புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜூலை 16, 2024 04:14 AM
மதுரை : மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்தி வேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறிவிப்பு பலகை அவசியம்
வலைச்சேரிப்பட்டி சமூக ஆர்வலர் சரவணன் அளித்த மனு: விவசாயிகளின் நன்செய், புன்செய் நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டம் தொழில் வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையில் 737 கண்மாய்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு எடுத்துச் செல்வோரை அப்பகுதியினர் கண்காணிக்க பெயர், முகவரி, புல எண், போன் எண், அனுமதி எண் விவரம் அடங்கிய அறிவிப்பு பலகையை கரையோரம் வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
சுகாதார வளாகம் வேண்டும்
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி துணைத் தலைவர் ஐ.பி.கதிரேசன் மனு: அவனியாபுரம் பெரியார் நகர் அங்கன்வாடி கட்டடம் உயிருக்கு அச்சுறுத்துதலாக உள்ளது.
அதனை புதிதாக கட்டிக் கொடுக்கவேண்டும். அப்பகுதி மக்களுக்காக சுகாதார வளாகம் கட்ட வேண்டும். மயானத்தில் ஈமச்சடங்குகள் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாடில்லாத மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும். துார்வாராத சாக்கடை கால்வாயை சீர்செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சாதி சான்று தாங்க...
ஹிந்து காட்டுநாயக்கன் சமுதாய தலைவர் வீராங்கன் மனு: நாங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் சமுதாயத்தில் 1500 பேர் வரை சாதிச்சான்றிதழ் பெற்று உள்ளனர். ஆனால் தற்போது அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இதனால் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கிறது. உடனே சாதிச்சான்று வழங்க வேண்டும் என்றார்.
அவர் கூறுகையில், ''பலமுறை மனு அளித்தும் சாதிச்சான்று தராததால் சமீபத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினோம். அதன்பின்னும் தர மறுக்கின்றனர். இன்னும் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

