ADDED : மே 09, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் மே 18 உலக மியூசிய தினத்தை முன்னிட்டு மே 11 முதல் 16 வரை சிறியவர், பெரியவர்களுக்கு பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது:
மே 11 காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை பல்லாங்குழி, 12 ல் தட்டாங்கல், 13 ல் தாயம், 14 ல் நொண்டி, 15 ல் கிட்டிப்புல், 16 ல் கோலிக்குண்டு போட்டிகள் நடத்தப்படும். வயது வரம்பின்றி ஆண், பெண்கள் பங்கேற்கலாம். சிறியவர்களுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவருக்கு ரூ.100 கட்டணம் உண்டு. போட்டியன்று விதிமுறை அறிவிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 97900 33307 ல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்.