/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயிலில் அவதிப்படும் மயில்வாகனன்; பக்தர்கள் கோயில் நிர்வாகம் கவனிக்குமா
/
வெயிலில் அவதிப்படும் மயில்வாகனன்; பக்தர்கள் கோயில் நிர்வாகம் கவனிக்குமா
வெயிலில் அவதிப்படும் மயில்வாகனன்; பக்தர்கள் கோயில் நிர்வாகம் கவனிக்குமா
வெயிலில் அவதிப்படும் மயில்வாகனன்; பக்தர்கள் கோயில் நிர்வாகம் கவனிக்குமா
ADDED : ஏப் 03, 2024 05:28 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆஸ்தான மண்டபம், திருவாட்சி மண்டபம், கம்பத்தடி மண்டபம் வழியாக மூலஸ்தானம் சென்று சுவாமி தரிசனம் முடித்து மீண்டும் அதே வழியாக வெளியே செல்கின்றனர்.
மதியம் உச்சிகால பூஜை 12:30 மணிக்கு முடிந்து மதியம் 1:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மதியம் 12:45 மணிக்கு கோயில் ராஜகோபுர பெரிய கதவுகள் சாத்தப்பட்டு, சுவாமி தரிசனம் முடித்துவரும் பக்தர்கள் மடப்பள்ளி மண்டபம், வள்ளி, தேவசேனா திருமண மண்டபங்கள் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர்.
மடப்பள்ளி மண்டபத்தின் வெளிப்பகுதியில் இருந்து திருமண மண்டபங்கள் வரை கூரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோயில் வாசல் வரை 1000 மீட்டர் திறந்த வெளியாக உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வாசல் முன்புள்ள பாதுகாப்பு மையத்தில் விட்டுச்சென்ற காலணிகளை எடுக்க திறந்த வெளியில் நடந்து செல்கின்றனர். கோடை நேரம் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், பாதங்களில் சூடு தாங்க முடியாமல் பக்தர்கள் ஓடுகின்றனர்.
இதில் சிறுவர்களையும் துாக்கிக் கொண்டு ஓடுவோர் நிலை பரிதாபமாக உள்ளது. வெயிலால் பக்தர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
அந்த பெரிய கதவுகளின் அருகே பணியாளர்களை நிறுத்தி மதியம் 1:15 மணிவரை பெரிய கதவை பாதி திறந்து வைத்தால் போதும். பக்தர்கள் நேர்வழியில் சென்று வாசலுக்கு அருகே காலணிகளை எடுத்துச் செல்வர். மயில்வாகனன் பக்தர்களின் வேதனையை தீர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

