ADDED : ஆக 31, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தனர்.
ஹார்விபட்டி பூங்காவில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
எஸ்.ஆர்.வி. நகர், திருநகர் சொர்ணம் காலனியில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதற்கு தீர்வு காண்பது, பாலாஜி நகரில் மழை நீர் வடிகால் அமைப்பது, செங்குன்றம் நகர் பகுதியில் தார் ரோடு அமைப்பது, தென்பரங்குன்றத்தில் இலவச கழிப்பறைகள் கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.
செட்டிகுளம் ஊருணி, பாண்டியன் நகர் பூங்காவை சீரமைப்பது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.
மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் ராதா, உதவி செயற் பொறியாளர்கள் சுப்பிரமணியன், முத்து உடனிருந்தனர்.