/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாங்கில் திருட முயன்ற எம்.பி.ஏ., பட்டதாரி கைது
/
பாங்கில் திருட முயன்ற எம்.பி.ஏ., பட்டதாரி கைது
ADDED : மே 13, 2024 06:35 AM

உசிலம்பட்டி: யூ டியூபை பார்த்து உசிலம்பட்டி தனியார் பாங்கில் திருட முயன்ற எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபர் லெனின் 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி எஸ்.எஸ்.ஐ., சாந்தி, போலீசார் அன்புகுமார் ஆகியோர் மே 11 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மதுரை ரோட்டில் முத்துாட் பாங்க் முன்பிருந்து ஹெல்மட் அணிந்த ஒருவர் ஓடியதை பார்த்தனர். பாங்க் முன்பக்க கதவின் பூட்டுகள் சேதமடைந்ததால் சந்தேகமடைந்து அவரை விரட்டிப்பிடித்து விசாரித்தனர்.
அவர் உசிலம்பட்டி ஆரியபட்டியைச் சேர்ந்த லெனின். எம்.பி.ஏ., படித்து, சென்னையில் தனியார் பாங்கில் பணிபுரிந்தவர்.
சம்பளம் பற்றாக்குறையால் வேலையை விட்டு நின்றுவிட்டார். சொந்த கிராமத்திற்கு வந்தவர் ஆன்லைன் ரம்மி விளையாடி, அதிலும் பணத்தை இழந்துள்ளார். இதையடுத்தே திருடுவது எப்படி, அதற்கான உபகரணங்கள் என்னென்ன என யூ டியூபினை பார்த்து தெரிந்து கொண்டார். உபகரங்கணங்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கியுள்ளார்.
முதல் முயற்சியாக முத்துாட் பாங்க் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது ரோந்து போலீசாரிடம் சிக்கிவிட்டார். பாங்க் மேலாளர் காமராஜர் புகாரின் பேரில் லெனின் கைது செய்யப்பட்டார்.