ADDED : ஜூலை 12, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஜூலை 13 –
மதுரையில் ஆனையூர், கருப்பாயூரணி, பனங்காடி பகுதிகளில் த.வெ.க., சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடந்தன.
கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமை வகித்து துவக்கினார். பங்கேற்ற மக்களுக்கு பொது மருத்துவம், கண் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்..
