/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறக்காத கழிப்பறைகளால் மீனாட்சி பக்தர்கள் அலைக்கழிப்பு
/
திறக்காத கழிப்பறைகளால் மீனாட்சி பக்தர்கள் அலைக்கழிப்பு
திறக்காத கழிப்பறைகளால் மீனாட்சி பக்தர்கள் அலைக்கழிப்பு
திறக்காத கழிப்பறைகளால் மீனாட்சி பக்தர்கள் அலைக்கழிப்பு
ADDED : மே 24, 2024 02:57 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறைகளில் இரண்டு திறக்கப்படாததால் முதியோர், பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக கீழ - வடக்கு சித்திரை வீதி சந்திப்பிலும், தெற்கு கோபுரம் எதிரே உள்ள சந்திலும் கழிப்பறை உள்ளது. இதை கோயில் நிர்வாகம் பராமரிக்கிறது. தவிர கீழச்சித்திரை வீதி கிழக்கு கோபுரம் அருகில் ரூ.20 லட்சம் செலவில் எம்.எல்.ஏ., தியாகராஜன் தொகுதி நிதியில் இருந்து கழிப்பறை கட்டப்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது இரண்டு நாட்கள் மட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு பூட்டப்பட்டு நேற்று வரை திறக்கப்படவில்லை. மின் இணைப்பும் இல்லை. அதேபோல் தெற்கு சித்திரை வீதியில் எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கட்டடமும் பூட்டி கிடக்கிறது.
கோடை விடுமுறையால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கழிப்பறையை தேடி மாற்று திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் கழிப்பறை தேடி அலைகின்றனர்.
ஹிந்து மக்கள் கட்சி மாவட்டதலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் கட்டப்பட்ட கழிப்பறைகளை மாநகராட்சி பராமரிக்கிறது. இதை தங்கள் பராமரிப்பில் ஒப்படைக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. உடனடியாக இரு கழிப்பறைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.