/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராஜஸ்தான் செல்லும் 'மெகா' கொள்கலன்கள்
/
ராஜஸ்தான் செல்லும் 'மெகா' கொள்கலன்கள்
ADDED : மே 20, 2024 12:21 AM

திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுாரில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் சேமிப்பு கிடங்கில் இருந்து பழைய கொள்கலன்கள் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
திருமங்கலம் கப்பலுார் தொழிற்பேட்டையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு (எச்.பி.சி.எல்.,) சொந்தமான காஸ் சேமிப்பு கிடங்கு, சிலிண்டர் நிரப்பும் மையம் உள்ளது. லாரிகளில் கொண்டு வரப்படும் காஸ் இங்கு 95 அடி நீளம், 16 அடி அகலம், 15 அடி உயரமுள்ள மிகப்பெரிய ஐந்துக்கும் மேற்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்படுகிறது. பின் சிலிண்டர்களில் காஸ் நிரப்பி தென் மாவட்டங்களில் விநியோகிக்கப்படுகிறது.
இந்த காஸ் நிரப்பும் ஸ்டேஷனில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கொள்கலன்களுக்கு மாற்றாக, புதிய கொள்கலன்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இங்கிருந்து அகற்றப்பட்ட பழைய மெகா சைஸ் கொள்கலன்கள் தனியார் நிறுவனம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் ஏற்றப்பட்டது.
அவை நான்கு வழிச்சாலையில் கப்பலுார் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொள்கலன்கள் ராஜஸ்தான் மாநிலம் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

