ADDED : மே 11, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆலோசனைகள், 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளில் படிப்பதற்கான ஆலோசனைகளை தமிழக அரசு வழங்கி வருவது குறித்து முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பேசினார். டி.இ.ஓ., முத்துலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சதீஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முத்துச்சாமி, ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தாரணி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.