ADDED : மார் 24, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : எழுமலை விவேகானந்தா நடுநிலைப் பள்ளியின் 38வது ஆண்டுவிழாவும், சுவாமி விவேகானந்தரின் 162வது ஜெயந்தி விழாவும் நடந்தது.
தலைமையாசிரியர் பாண்டிச்செல்வி வரவேற்றார். செயலாளர் சுவாமி சிவானந்த மகராஜ் தலைமை வகித்தார்.
பள்ளி நிர்வாகிகள் தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களான சுவாமி பிரபானந்தர் மகராஜ், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன், எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

