/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கையாளுவதில் கவனம் தேவை அமைச்சர் தியாகராஜன் பேச்சு
/
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கையாளுவதில் கவனம் தேவை அமைச்சர் தியாகராஜன் பேச்சு
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கையாளுவதில் கவனம் தேவை அமைச்சர் தியாகராஜன் பேச்சு
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கையாளுவதில் கவனம் தேவை அமைச்சர் தியாகராஜன் பேச்சு
ADDED : செப் 13, 2024 05:33 AM
மதுரை: ''ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கவனமாக கையாளாவிட்டால் தவறான விளைவுகளை ஏற்படுத்தும்'' என மதுரை மடீட்சியாவில் நடந்த மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாமில் அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சி.இ.டி., ஸ்கில்ஸ்டா, நாஸ்காம் பவுண்டேஷன் சார்பில் 'சைபர் செக்யூரிட்டி' மற்றும் ஐ.டி., துறை பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரை மடீட்சியாவில் நடந்தது. சி.இ.டி., நிர்வாக அறங்காவலர் ஜெயராமன் வரவேற்றார். அமைச்சர் பேசியதாவது: படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற கேரண்டி கிடையாது. எனவே திறன் மேம்பாட்டுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களின் திறமையின்மை, வேலைவாய்ப்பின்மை இடைவெளியை குறைக்கும். வேலைக்கான சந்தையில் என்ன தேவை என்பதை கல்லுாரி பாடத்திட்டத்திலும் தேர்விலும் கேட்கிறார்களா என்றால் அவ்வாறு நடப்பதில்லை. அதை சரிசெய்வதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கவனமாக கையாளாவிட்டால் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
ஸ்கில்ஸ்டா நிறுவன இயக்குநர் கொட்டாரம் ரமேஷ், நாஸ்காம் பவுண்டேஷன் முதுநிலை மேலாளர் கீதா, எச்.சி.எல்.டெக் மதுரை இயக்குநர் திருமுருகன் சுப்புராஜ் பேசினர். மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.
அரட்டை அடிக்க வரக்கூடாது
அமைச்சர் பேச ஆரம்பித்த போது மாணவர்கள் சப்தம் அதிகரித்தது. கோபமான அமைச்சர் 'ஏய்...' என கண்டிக்க அரங்கு அமைதியானது. தொடர்ந்து அவர் பேசும் போது, 'நிகழ்ச்சிக்கு வந்தால் அரட்டை அடித்துக் கொண்டு, சொல்வதை கேட்காமல் இருக்கக்கூடாது.
ஜாலியாக இருக்க வேண்டிய நேரத்தில் ஜாலியாகவும் படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும் வேண்டும். கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது' என்றார்.

