sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க., துணை நிற்கும்: மதுரையில் அமைச்சர் உதயநிதி உறுதி

/

பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க., துணை நிற்கும்: மதுரையில் அமைச்சர் உதயநிதி உறுதி

பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க., துணை நிற்கும்: மதுரையில் அமைச்சர் உதயநிதி உறுதி

பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க., துணை நிற்கும்: மதுரையில் அமைச்சர் உதயநிதி உறுதி

1


UPDATED : செப் 10, 2024 07:14 AM

ADDED : செப் 10, 2024 05:45 AM

Google News

UPDATED : செப் 10, 2024 07:14 AM ADDED : செப் 10, 2024 05:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு தி.மு.க., எப்போதும் துணை நிற்கும் என மதுரை ஒத்தக்கடையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் சங்கீதா வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன், தேனி எம்.பி., தங்கத்தமிழ்ச் செல்வன், தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன், மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எம்.பி.வெங்கடேசன், எம்.எம்.ஏ., பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உதயநிதி பேசியதாவது: கட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பே 2018 ல் இந்த இடத்தில் (ஒத்தக்கடை) மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பின் 72 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மதுரையில் கட்சி, அரசு என எந்த நிகழ்ச்சிகள் என்றாலும் அதை பிரமாண்டமாக நடத்திக் காட்டுபவர் அமைச்சர் மூர்த்தி. அந்த வகையில் தற்போது 12,233 பேருக்கு இலவச பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு ரூ.300 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டை காட்டுகிறது.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் அளிப்பது போல் மக்களாகிய நீங்கள் ஆசிரியர்களாக இருந்து தி.மு.க.,விற்கு நுாறு சதவீதம் மதிப்பெண்கள் அளித்துள்ளீர்கள். இதன் மூலம் மேலும் பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும் என்பது உறுதி. மதுரைக்கு தேவையான பல திட்டங்களை அரசிடம் அமைச்சர்மூர்த்தி கேட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். மக்கள் அரசின் தேவைகளை தேடிச் சென்ற காலம்போய் தற்போது அரசே மக்களை தேடி வந்து உதவித் திட்டங்களை வழங்கும் ஆட்சி நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசின் சிறந்த பாடத்திட்டம் தான். கடனுதவி பெறும் பெண்கள் சிறந்த தொழில்முனைவோர்களாக சாதிக்க வேண்டும். பெண்கள் துணிச்சலோடு முன்னேற தி.மு.க., எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு பேசினார்.

விழாவில் சீமானுாத்து ஊராட்சி தலைவர் அஜித்பாண்டி, செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரபு, தெற்கு மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

l விழாவில் அமைச்சர் உதயநிதிக்கு வெள்ளி செங்கோலை வழங்கி அமைச்சர் மூர்த்தி பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை முழுமையாகவும், 50 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்றார்.

l விழாவிற்கு வரும் வழியில் மதுரை அரசு மருத்துவமனை புதிய கட்டடம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் உதயநிதி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

l நகரில் இருந்து விழா மேடை வரை ரோட்டின் இருபுறமும் நின்று கட்சியினர் வரவேற்றனர். 100 அடிக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

l ஒத்தக்கடை, எஸ்.எஸ்.காலனியில் தி.மு.க., இளைஞரணி சார்பில் கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்தார். நகர் செயலாளர் தளபதி, பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, வட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

l அச்சம்பத்து மாற்றுத்திறன் வீரர் மனோஜ்குமார் பாரா பாட்மின்டன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று அரசு பணியில் உள்ளார். அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவரது வீட்டிற்கு சென்று உதயநிதி வாழ்த்தினார்.

l கட்சி மீது அதிருப்தியில் உள்ள பகுதி, வட்ட செயலாளர்கள் பலர் உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய மூர்த்தி








      Dinamalar
      Follow us