நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் 11 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி தலைமையில் செப்.9 ல் ஒத்தக்கடை விவசாய கல்லுாரி அருகே நடக்கிறது.
விழா நடக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா, போலீஸ் எஸ்.பி., அரவிந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பி.ஆர்.ஓ., சாலிதளபதி பங்கேற்றனர்.