மதுரை; மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தொகுதி வாரியாக நலத்திட்டங்கள், அன்னதானம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மார்ச் 1 ல் கிழக்கு தொகுதியில் இரணியம், சுந்தரராஜன்பட்டி, திருமோகூர், கள்ளந்திரி, வண்டியூர் பகுதியில் முதியோர் இல்லம், கோயில்களில் அன்னதானம் நடக்கிறது.
மதுரை மேற்கு தொகுதி யில் ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், பழங்காநத்தம் பகுதியிலும், மேலுார் சட்டசபை தொகுதியில் அலங்காநல்லுார், வாடிப்பட்டி, பாலமேடு பகுதிகளிலும் முதியோர் இல்லம், கோயில்களில் அன்னதானம் நடக்கின்றன. மார்ச் 9 மேற்கு, மார்ச் 16 ல் மேலுார் தொகுதிகள் சார்பில் அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஆனையூரில் மார்ச் 28 - 30 ல் தேசிய அளிவில் மகளிர் கபடி போட்டிகள் நடக்கின்றன என தெரிவித்துள்ளார்.

