/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொள்முதல் செய்தும் பணம் வந்து சேரல
/
கொள்முதல் செய்தும் பணம் வந்து சேரல
ADDED : மே 01, 2024 07:33 AM
மதுரை : சோழவந்தான் நெடுங்குளத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை விற்ற பின்னும் 20 நாட்களுக்கு மேலாக பணம் பட்டுவாடா செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பாரதிய கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள் கூறியதாவது: நெடுங்குளம் பகுதியில் 70 விவசாயிகளின் 300 ஏக்கர் நிலத்தில் நெல் விளைந்துள்ளது. இதுவரை 12 ஆயிரம் டன் நெல் அறுவடை செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெடுங்குளம் நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் விற்றுள்ளனர். இன்னும் 5000 டன் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. வழக்கமாக கொள்முதல் மையத்தில் விற்றால் அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். ஏப்.,2 க்கு பிறகு பணம் பட்டுவாடா செய்யவில்லை.
கொள்முதல் மையத்தில் விற்றால் உடனடி பணம் என்பதால் அறுவடைக்கு இயந்திரங்களை கடன் சொல்லி வாடகைக்கு எடுத்து அறுவடை செய்துள்ளோம். அவர்களுக்கு பாக்கி வைத்துள்ளோம். அடுத்ததாக மோட்டார் கிணறு வைத்துள்ள விவசாயிகள் குறுவைக்கு தயாராகி விடுவர்.
கையில் காசில்லாத நிலையில் விதைப்பும் தாமதமாகிவிடும். வாணிப கழக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளோம். கலெக்டர் சங்கீதா தலையிட்டு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்றார்.