ADDED : ஆக 22, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைய மகப்பேறு வார்டு முதல் மாடியில் பெரியவர்களுக்கு 20 படுக்கை, குழந்தைகளுக்கு 5 படுக்கையுடன் அமைந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் உள்நாட்டிற்கு வரும் விமான பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை யாருக்கும் நோய் கண்டறியப்படவில்லை. காய்ச்சலுடன் உடலில் தடிப்புகள் இருந்தால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.