/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முடியலைங்க: தேர்தல் முடிந்தும் கட்டுப்பாடுகள்: விழா நடத்துவோர் அலைக்கழிப்பு
/
முடியலைங்க: தேர்தல் முடிந்தும் கட்டுப்பாடுகள்: விழா நடத்துவோர் அலைக்கழிப்பு
முடியலைங்க: தேர்தல் முடிந்தும் கட்டுப்பாடுகள்: விழா நடத்துவோர் அலைக்கழிப்பு
முடியலைங்க: தேர்தல் முடிந்தும் கட்டுப்பாடுகள்: விழா நடத்துவோர் அலைக்கழிப்பு
ADDED : மே 10, 2024 05:08 AM

மதுரை: லோக்சபா தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விழாக்களுக்கு அனுமதி பெறுவோர் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர் .
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19 ல் நடந்தது. இதற்கான மனுதாக்கல், பிரசாரம், தேர்தல் என ஒரு மாதம் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல தடை, நிகழ்ச்சிகளை நடத்த கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' மூலம் அனுமதி பெறுவது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்தல் முடிந்த பின்பும் விதிமுறைகள் அமலில் உள்ளதாக தெரிவித்தாலும், நடைமுறையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் இல்லை.
இருப்பினும் விழா நடத்துவோர் வழக்கமான நடைமுறையில் அனுமதி கோரினால், போலீசார் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வரும்படி கூறுகின்றனர். இல்ல விழாக்கள், ஆன்மிக விழாக்களுக்கும்கூட தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வாருங்கள் என அனுப்புகின்றனர்.
தேர்தல் அதிகாரிகளிடம் சென்றால், 'நிகழ்ச்சிகளில் அரசியல் கலப்பு இல்லாதவரை, சாதாரண விழாக்களுக்கு போலீசாரே அனுமதி அளிக்கலாம். கலெக்டர் அலுவலகம் வரத்தேவையில்லை. அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றால் மட்டுமே தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறவேண்டும்' என்கின்றனர்.
இதனால் விழாக்கள் நடத்துவோர் அங்குமிங்குமாக அலைகின்றனர். எனவே தேர்தல் அதிகாரிகள் விழாக்கள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து போலீசாருக்கு அறிவுறுத்துதலை வழங்க வேண்டும்.