
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வெள்ளலுார் மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்.,23 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று முளைப்பாரி எடுத்து ஏழை காத்தம்மன் கோயில் வீடு மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்தன் உடைப்பு கண்மாயில் கரைத்தனர்.
அரிசி, பாசிப்பயறு, தேங்காய், வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்கள் வீடுகளில் கொடுத்து வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.

