நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டியில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.
முதல் நாள் அம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய பால் இளநீர் உள்ளிட்ட 18 வகை திரவியங்களில் அபிஷேக வழிபாடு செய்தனர். சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். 2ம் நாள் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பெண்கள் கோயிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.