/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய செஸ் : கல்வி சர்வதேச பள்ளி சாதனை
/
தேசிய செஸ் : கல்வி சர்வதேச பள்ளி சாதனை
ADDED : ஆக 21, 2024 04:46 AM

சோழவந்தான் : அசாம் மாநிலத்தில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்ககான 2வது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.
இதில் பங்கேற்ற மதுரை நகரி கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணி மாணவர்கள் யஸ்வந்த், அருள் பிரகாஷ், பிரபாகரன், ஜோ க்ளாட்சன், அனுஸ்ரீ 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். தேசிய அளவில் சாதித்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு மாநில செஸ் சங்க இணை செயலாளர் பிரகதேஷ் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட செஸ் சங்க செயலாளர் உமா மகேஸ்வரன், துணைத் தலைவர் ராஜதர்ஷினி முன்னிலை வகித்தனர். பள்ளி குழும தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர் கோப்பை வென்ற அணி வீரர்களை பாராட்டினர்.

