ADDED : மார் 10, 2025 05:18 AM
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் சூரிய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான ஆதித்யா எல்.ஒன். விண்கலத்தின் வழியே பெறப்பட்ட கண்டுபிடிப்பு தகவல்கள் அடிப்படையில் சூரியனைப் பற்றியதாக கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் மினிமாலா வரவேற்றார். அறிவியல் தின ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், இஸ்ரோ விஞ்ஞானி முத்துப்பிரியாள் பேசினர். உதவி பேராசிரியர் செண்பக பாலகிருஷ்ணன் நன்றி கூறினர். பேராசிரியர்கள் சரவணகுமார், சங்கரநாராயணன், சர்வேஸ்வரன், நாராயணமூர்த்தி, நித்தியா, முருகன், லட்சுமி ஒருங்கிணைத்தனர்.
* மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடந்தன. கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு வரவேற்றார். துறைத் தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். தியாகராஜர் கலைக் கல்லுாரி பேராசிரியர் ராஜ கார்த்திகேயன், வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார் பேசினர். பேராசிரியர் கண்ணன் ஒருங்கிணைத்தார்.
சத்திரப்பட்டி அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசு, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி 2 ம் பரிசு பெற்றன. பேராசிரியர் ஹேமலதா நன்றி கூறினர்.