ADDED : பிப் 26, 2025 05:55 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் மியூசிய பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. யோகா மாணவர் முத்தானந்தம் வரவேற்றார்.
இயற்கை மருத்துவ வாழ்வியல் மருத்துவமனையின் இயக்குனர் பிரித்திகா பேசுகையில் ''குடும்ப ஆரோக்கியம் பெண்களின் ஆரோக்கியத்தை சார்ந்து உள்ளது. பருவ வயது பெண்கள் கால்சியம், இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் முதுமையில் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றார்.
ஆரோக்கிய பள்ளியின் இயக்குனர் ரஞ்சித் குமார் பேசுகையில் தினமும் உடற்பயிற்சி செய்வது, பாரம்பரிய, உயிருள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றார். அலுவலக உதவியாளர் நாகராஜன் நன்றி கூறினார்.
செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பணியாளர்கள் நாகசுந்தரம், பாண்டிச்செல்வன், யோகா ஆசிரியர் பழனிகுமார் கலந்து கொண்டனர்.

