/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேல்முருகன் நகரில் புதிய மின்மாற்றி
/
வேல்முருகன் நகரில் புதிய மின்மாற்றி
ADDED : ஜூலை 24, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசரடி உபகோட்ட மின்வாரிய பிரிவில் வேல்முருகன் நகர் பகுதியில் கூடுதல் மின்பளு, குறைந்த மின் அழுத்தம் என மின்சாரம் வினியோகத்தில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்தன.
இக்குறைபாட்டை சரிசெய்யும் பொருட்டு, புதிதாக 25 கிலோவாட் மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தாமிரபரணி துணை மின்நிலையம் என்ற பெயரில் மின்மாற்றி நிறுவப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் மதுரை நகர் மேற்பார்வை பொறியாளர் சந்திரா, மேற்கு கோட்ட செயற்பொறியாளர் லதா, அரசரடி உதவி செயற்பொறியாளர் சண்முகநாதபூபதி, உதவி மின்பொறியாளர் சவுந்தரபாண்டியன், பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

