நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மரக்கன்று நடுதல்
ஒத்தக்கடையில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர் சங்கம், இயற்கையாளர்கள் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவி முருகேஸ்வரி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் காவேரிமணியன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் புங்கை மரக்கன்று நட்டனர். 'இனி வரும் காலங்கள் அதிகமான வெயில், வெப்ப அலை வீசுவதால் நாட்டு மரங்கள் அதிகளவில் நடவு செய்து வளர்ப்போம், எக்காரணம் கொண்டும் மரங்களை வெட்ட மாட்டோம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரங்களை வெட்டாமல் தடுப்போம்' என உறுதிமொழி எடுத்தனர். சங்க உறுப்பினர்கள் இனிப்பு வழங்கினர்.